ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்டு..! ஒரே தேதியில் பிறந்த 3 உடன்பிறப்புகள்… பிரசவம் பார்த்த டாக்டருக்கும்… நெல்லையில் நடந்த உலக மகா அதிசயம்…!!

By Soundarya on ஆனி 11, 2026

Spread the love

நெல்லை மாவட்டத்தில் “ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்டு” என்று சொல்லும் அளவுக்கு ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்திய அரியதொரு மருத்துவ அதிசய நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, வெவ்வேறு வயதுடைய மூன்று உடன்பிறப்புகள், ஒரே மகப்பேறு மருத்துவமனையில், இயற்கை முறையில் ஒரே தேதியில் (ஜூன் 10) பிறந்து அரிய சாதனை படைத்துள்ளனர். இந்த அபூர்வ நிகழ்வு மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கற்பனைக்கு எட்டாத இந்த அரிய நிகழ்வை ‘யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘பியூச்சர் கலாம்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய உலக சாதனை நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ உலக சாதனையாக அங்கீகரித்து கௌரவித்துள்ளன. ஒரே தேதியில் மூன்று குழந்தைகள் பிறப்பதே அரிதான ஒன்று என்ற நிலையில், இது எவ்வித திட்டமிடலும் இன்றி இயற்கை முறையில் நிகழ்ந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

   

இந்த அதிசயத்தின் உச்சக்கட்ட “ட்விஸ்டாக”, அந்த மூன்று குழந்தைகளுக்கும் வெற்றிகரமாக சுகப்பிரசவம் பார்த்த பெண் மருத்துவரும் இதே ஜூன் 10-ஆம் தேதியில் பிறந்தவர் என்பதுதான்! ஒரே தேதியில் மூன்று உடன்பிறப்புகள் பிறந்த அதிசயத்தோடு, அவர்களுக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் பிறந்தநாளும் அதே தேதியில் அமைந்த இந்த அரிய தற்செயல் நிகழ்வையும் சேர்த்து உலக சாதனை நிறுவனங்கள் தங்களது சாதன புத்தகத்தில் பதிவு செய்துள்ளன.