ரூர்கேலா ஐ.ஐ.டி.உயிரி அறிவியல் மற்றும் உயிரி என்ஜினியரிங் துறை ஆராய்ச்சியாளர்கள், சிக்குன்குனியா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் புதிய ஆயுர்வேத மருந்து கலவை ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவோடு பேராசிரியர் ஷைலி தோமர் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஏடிஸ் கொசுக்களால் பரவி, கடுமையான மூட்டுவலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் சிக்குன்குனியா வைரஸை முற்றிலும் அழிக்க தற்பொழுது பிரத்தியேக மருந்துகள் இல்லாத சூழலில், இந்த புதிய கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த ஆராய்ச்சியில் பல கட்டங்களாக வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட கோமியம், கருஞ்சீரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட தைமோகுவினோன் மற்றும் மிளகில் இருந்து எடுக்கப்பட்ட பைப்பரின் ஆகிய இயற்கை மூலக்கூறுகள் அடங்கிய ஆயுர்வேத கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. சிக்குன்குனியா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களுக்கு இந்தக் கலவையைக் கொடுத்து ஆய்வகத்தில் சோதனை செய்தபோது, வைரஸின் தாக்கம் 99.85 சதவீதம் வரை குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட கோமியத்தை மட்டும் தனியாகச் சோதித்த பொழுதும் வைரஸின் அளவு 90 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.
இந்த ஆயுர்வேத மூலக்கூறுகள் சிக்குன்குனியா வைரஸ் மனித உடலின் செல்களுக்குள் நுழைந்து, தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளப் பயன்படுத்தும் முக்கியமான புரதங்களை முழுமையாக முடக்குகின்றன. இருப்பினும், இந்த ஆராய்ச்சி தற்பொழுது ஆய்வகத்தில் உள்ள சோதனைக் குழாய்கள் மற்றும் வளர்ப்புச் செல்களில் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், மனிதர்களிடமோ அல்லது விலங்குகளிடமோ இன்னும் சோதித்துப் பார்க்கப்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த ஆய்வு எதிர்காலத்தில் பக்கவிளைவுகளற்ற பாதுகாப்பான சிக்குன்குனியா மருந்து சந்தைக்கு வர ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…