மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர்-உம்ரெட் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சாலையில் பேருந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகப் பேருந்தில் தீப்பற்றியுள்ளது; இதனைக் கண்டதும் பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்தால் போதும் என அலறியடித்துக் கொண்டு அவசர அவசரமாகக் கீழே இறங்கினர்.
தீ பேருந்து முழுவதும் மளமளவெனப் பரவி கொழுந்துவிட்டு எரிவதற்கு முன்பாகவே பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால், மிகப்பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடிப் பேருந்தில் எரிந்த தீயை முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதக் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓடும் பேருந்தில் திடீரெனத் தீப்பிடித்ததற்கான சரியான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
