பட்டப்பகலில் துணிகரம்..! நடுரோட்டில் துடிக்க துடிக்க கொத்தனார் வெட்டிக்கொலை… விருதுநகரில் பயங்கர அதிர்ச்சி…!!

By Soundarya on தை 7, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரைச் சேர்ந்த ராமசாமி (32) என்ற கொத்தனார், இன்று வேலைக்குச் சென்றபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தேடி வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.