கர்நாடக மாநிலம் களபுறகி மாவட்டத்திலுள்ள கன்னி கிராமத்தை சேர்ந்த பீரப்பா என்பவருடைய மனைவி சாந்தாபாய். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த கணவன் பீரப்பா கள்ளக்காதலை கைவிடும் படி தன்னுடைய மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சாந்தா பாய் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பிறகு அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறி நாடகமாடி கணவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை நம்ப வைத்துள்ளார். இந்நிலையில் கூடை படையினருக்கு சாந்தா பாய் பணம் கொடுக்காமல் இருந்த நிலையில் அவர்கள் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு வந்துள்ளனர்.
இதில் சில பேச்சுகளை அவர்கள் ஆடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர். அந்த ஆடியோக்களை சிலர் கைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அந்த ஆடியோ வைரலானதை தொடர்ந்து பீரப்பாவின் குடும்பத்தினர் உடனே போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாந்தா பாயை பிடித்து விசாரணை செய்ததில் தன் கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள போலீசார் நான்கு பேர் கொண்ட கும்பலையும் கைது செய்துள்ளது. கொலை சம்பவம் நடந்த 7 வருடங்களுக்கு பிறகு இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
