டெல்லி மெட்ரோ இரயிலில் பயணித்த இரண்டு பெண் பயணிகளை, உடன் பயணித்த நபர் ஒருவர் அவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலையில் லோக் நாயக் பவன் மெட்ரோ நிலையத்திலிருந்து கிரீன் பார்க் நோக்கிச் சென்ற இரயிலில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
தான் எந்த வீடியோவையும் எடுக்கவில்லை என்று அந்த நபர் தொடர்ந்து மறுத்தபோதிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் அவசர அவசரமாகத் தனது கைபேசியில் இருந்த சில புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை நீக்க முயன்றதாகத் தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த பெண்கள், அந்த நபரிடம் தைரியமாகத் தட்டி கேட்டு ஆதாரங்களைக் கோரியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின்போது இரு பெண்களும் அந்த நபரைத் தைரியமாக எதிர்கொண்டு கேள்வி கேட்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாகக் காவல் துறையிலோ அல்லது மெட்ரோ நிர்வாகத்திடமோ அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.…
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி பகுதியிலுள்ள விடுதி ஒன்றில், திருமணம் முடிந்து மூன்று மாதங்களே ஆன 28 வயது பெண் ஒருவர்…
கேரளாவில் பணியாற்றும் நீதிபதி ஒருவரின் 17 வயது மகன், கொச்சியில் தனது தந்தையின் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை அதிவேகமாக…
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமிக்கு நள்ளிரவில் வந்த…
சிங்கப்பூரில் காதலி தனக்குத் துரோகம் செய்ததாகக் கூறி, 40 வயது நபர் ஒருவர் சாட்ஜிபிடி உதவியுடன் காதலியின் அந்தரங்க வீடியோ…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, ஓடும் லாரியின் முன் பாய்ந்து 21 வயது…