“ஹலோ சார்… வீடியோ எடுக்கலையா?… அப்போ போனை காட்டுங்க முதல்ல… பெண்களை ரகசியமாக படம்பிடித்த நபரை… வெளுத்து வாங்கிய வைரல் சம்பவம்…!”

By Swetha on ஆவணி 10, 2026

Spread the love

டெல்லி மெட்ரோ இரயிலில் பயணித்த இரண்டு பெண் பயணிகளை, உடன் பயணித்த நபர் ஒருவர் அவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலையில் லோக் நாயக் பவன் மெட்ரோ நிலையத்திலிருந்து கிரீன் பார்க் நோக்கிச் சென்ற இரயிலில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

தான் எந்த வீடியோவையும் எடுக்கவில்லை என்று அந்த நபர் தொடர்ந்து மறுத்தபோதிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் அவசர அவசரமாகத் தனது கைபேசியில் இருந்த சில புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை நீக்க முயன்றதாகத் தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த பெண்கள், அந்த நபரிடம் தைரியமாகத் தட்டி கேட்டு ஆதாரங்களைக் கோரியுள்ளனர்.

   

இந்தச் சம்பவத்தின்போது இரு பெண்களும் அந்த நபரைத் தைரியமாக எதிர்கொண்டு கேள்வி கேட்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாகக் காவல் துறையிலோ அல்லது மெட்ரோ நிர்வாகத்திடமோ அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.