பெங்களூருவில் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் வடகிழக்கு மாநில இளம்பெண், பணி முடிந்து வீடு திரும்பியபோது கார் ஒன்றில் வந்த நபர் அநாகரீகமாக நடந்துகொண்டார். ஆடை ஏதுமின்றி நிர்வாண நிலையில் கார் ஓட்டி வந்த அந்த மர்ம நபர், இளம்பெண் அருகே காரை நிறுத்தி தன்னைத் பின்தொடருமாறும், காருக்குள் ஏறுமாறும் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகல் நேரத்திலேயே இச்சம்பவம் நடந்ததாகவும், அங்கிருந்தவர்கள் யாரும் தனக்கு உதவ முன்வரவில்லை என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள், அந்த நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரி காவல்துறையினருக்குப் புகார் அளித்து வருகின்றனர்.
