Alien

பாதாள அறையில் சிலை வைத்து ஏலியனை வழிபடும் நபர்… இனி ஏலியன்கள் அதிகம் வருவார்கள் என்று பேச்சு…

By admin on ஆவணி 2, 2024

Spread the love

ஏலியன் எனப்படும் வேற்றுகிரக உயிரினம் நம் பூமியை சார்ந்தது இல்லாமல் வேற்று உலக உயிரினத்தை குறிப்பதாகும். இது மனிதனைப் போல் அல்லாமல் ஒழுங்கற்ற உடலமைப்பை கொண்டிருக்கிறதாக கூறப்படுகிறது. இது ஒரு பாக்டீரியா மாதிரியான உயிரினம் சூரிய குடும்பத்தில் மட்டுமல்லாமல் அண்டம் முழுவதும் பரவி கிடக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த உயிரினம் பூமியை தவிர வேறு கிரகத்தில் வாழவதற்கு சாத்தியங்கள் இருக்கிறது என கால் சகன் ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற சயின்டிஸ்ட்களால் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் ஏலியன்கள் வாழ்வதற்கான முழுமையான சான்று இதுவரை கிடைக்கவில்லை. இவற்றைத் தேடி ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்படும் வானொலி அலைகளும் தொலைநோக்குகளும் இருபதாம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறதாக கூறுகின்றனர். திரைப்படங்கள் மற்றும் புனை கதைகளில் இந்த ஏலியன்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

   

ஏலியன்கள் பறக்கும் தட்டில் பூமியை சுற்றி வருவதாகவும், பூமியைப் போலவே வேறொரு கிரகத்தில் அவர்கள் வாழ்ந்து வருவதாகவும், மனிதர்களை ஆராய்ச்சி செய்ய அவர்கள் பறக்கும் தட்டில் பூமியை சுற்றுகிறார்கள் என்ற கூற்றும் வலம் வருகிறது. இதற்கு சாய்ந்தாக உலகத்தில் பறக்கும் தட்டை பார்த்தோம் என்று ஒரு சிலர் கூறுவதாக செய்திகளிலும் வந்தது. ஆனால் இவை அனைத்தும் நிரூபிக்கப்படாத ஒன்றுதான்.

   

 

இந்நிலையில் தற்போது சேலம் மல்லமுப்பம்பட்டி பகுதியில் சிவகயிலாய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இரட்டை ஆறுடை சிவலிங்கம், சக்தி தேவி, பார்வதி தேவி, லிங்க ரூபத்தில் சிவன், பஞ்சமி வாராகி அம்மன், நான்குமுக முருகன், ஐந்துமுக காளி, காமதேனு உள்ளிட்ட பல கடவுள் சிலைகள் இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தை பராமரித்து வருபவர் லோகநாதன் என்ற பாக்யா சித்தர் ஆவார்.

இவர் இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் ஏலியனை கடவுள் சிலை போல் வடித்து அதை பாதாளத்தில் அறை ஒன்று கட்டி அதற்கு மாலையிட்டு பூஜை செய்து வருகிறார். இது குறித்து பாக்யா சித்தர் கூறுகையில், பிரபஞ்சத்தில் சிவன் படைத்த முதல் பிரபஞ்ச தெய்வம் ஏலியன் தான். உலகிலேயே இங்குதான் ஏலியன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் சிலை அமைத்து வழிபாடு செய்வதற்கு முன்பாக ஏலியனிடம் அனுமதி பெற்று தான் நாங்கள் சிலை வைத்து பூஜை செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் ஏலியன்கள் உலகிற்கு தீங்கு செய்ய மாட்டார்கள். அவர்களிடம் அளவில்லாத சக்தி உள்ளது. மக்களுக்கு நன்மை செய்யவே அவர்கள் பூமிக்கு தேடி வருகிறார்கள். அவர்களை பூமிக்கு வர வைக்கவே இந்த ஆலயத்தை அமைத்து பூஜித்து வருகிறோம். இனி ஏலியனின் வருகை அதிகமாகும். அதனால் ஏலியனை வணங்கி மகிழ்ச்சி அடையுங்கள் என்று கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் சேலத்தை சேர்ந்த பாக்கியா சித்தர்.

 

View this post on Instagram

 

A post shared by Thanthi TV (@thanthitv)