பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் கடந்த 2000 ஆண்டு வெற்றி கொடி கட்டு திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு கடந்த 2004 ஆம் ஆண்டு ஆட்டோகிராப் என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு 2005-ஆம் ஆண்டு தவமாய் தவமிருந்து படத்தை இயக்கினார். இந்த படங்கள் தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. மேலும் சேரன் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், முரண், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் சேரன் போட்டியாளராக கலந்து கொண்டார். முதன் முதலில் சேரன் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான புரியாத புதிர் திரைப்படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். அதன்பிறகு கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார். சேரனின் ஆட்டோகிராப் திரைப்படம் 4 தேசிய விருதுகளையும், ஆறு தமிழக அரசின் விருதுகளையும் வென்றது.
இந்த நிலையில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர் பாமக நிறுவனர் ராமதாஸ் இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இயக்குனர் சேரன் தான் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்கப் போகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் லைக்கா நிறுவனம் தற்போது பின் வாங்குவதாக கூறப்படுகிறது.
இதனால் பா.ம.க-வின் முக்கிய அங்கமான தமிழ் குமரன் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அவர்தான் இந்த படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க உள்ளனர். முதற்கட்டமாக திருத்தணியில் வைத்து சூட்டிங் தொடங்க ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title