“காவல் மரணத்தில் 19 காயங்கள்… ‘நீங்க எதுக்குங்க சார் CM…?’ – விஜய்யை அலறவிடும் பழைய வீடியோ…! தவெக ஆட்சியில் வெடித்தது பெரும் சர்ச்சை…!”

By Swetha on ஆடி 16, 2026

Spread the love

நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ள நிலையில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக மூன்று காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், தற்போதைய தமிழக முதல்வராக இருக்கும் தவெக தலைவர் ஜோசப் விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்தோ அல்லது இரங்கலோ தெரிவிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று, தமிழகத்தில் தவெக எதிர்க்கட்சியாக இருந்தபோது காவல் மரணத்திற்கு எதிராக ஜோசப் விஜய் ஆவேசமாகப் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அன்றைய திமுக அரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நோக்கி, “எல்லாத்துக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கணும்னா அப்புறம் நீங்க எதுக்குங்க சார்? உங்க ஆட்சி எதுக்கு, சிஎம் பதவி எதுக்கு?” என்று விஜய் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அப்போதைய அரசை “சாரிம்மா சர்க்கார்” என்றும் “வெற்று விளம்பர சர்க்கார்” என்றும் விமர்சித்து, சட்டம் ஒழுங்கைச் சரி செய்யாவிட்டால் தவெக மக்களைத் திரட்டிப் போராடும் என்றும் அவர் பேசியுள்ளார்.

   

அன்று எதிர்க்கட்சித் தலைவராக ஆவேசம் காட்டிய விஜய், இன்று தவெக ஆட்சியில் மாற்றுத்திறனாளி சிறையில் உயிரிழந்த சம்பவத்திற்கு ஏன் மௌனம் காக்கிறார் என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. “ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் ஆவேசம், வந்த பிறகு மௌனமா? இதுதான் உங்கள் மாற்றமா?” என அதிமுகவினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள தவெகவினர், தவறு செய்த காவல் அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு துரிதமாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறி வருகின்றனர். எனினும், உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்திற்கு அரசு வேலையும், நிதியுதவியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும், முதல்வர் தரப்பில் இருந்து குறைந்தபட்ச இரங்கலாவது வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வலுத்து வருகிறது.