“சாவிலும் பிரியாத காதல்!”… எங்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்யுங்கள்”… காதல் தம்பதி விபரீத முடிவு… கண்ணீர் மல்க வைக்கும் கடிதம்…!!!

Spread the love

மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த அருண் (28) மற்றும் செல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரியா (26) ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அருண் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் அவர் வீட்டிலேயே முடங்கியுள்ளார். அவரது மனைவி பிரியா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

வேலை இல்லாதது மற்றும் மருத்துவச் செலவுகள் காரணமாகக் குடும்பத்தில் நிலவிய நிதி நெருக்கடியால் அருண் கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த அவர், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மனைவியிடம் கூறியுள்ளார். தன் கணவர் இல்லாத வாழ்க்கையை வாழ விரும்பாத பிரியாவும் அவருடன் இணைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதன்படி, புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

தகவலறிந்த ஊமச்சிகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், “எங்கள் இறப்பிற்கு யாரும் காரணமில்லை; எங்கள் இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யுங்கள்; எங்களுடைய இறப்பை முன்னிட்டு ஊர் கோவில் திருவிழாவை நிறுத்திவிட வேண்டாம்” என்று உருக்கமாக எழுதியிருந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

“பிஞ்சு குழந்தைகள் கண்முன்னே கொடூரம்…” கதறி துடித்த ஆசிரியை… வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கொன்ற வாலிபர்…. திக் திக் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26…

27 minutes ago

ஹோட்டலில் ரூமில் காதலர்கள்…! “அவ செத்துட்டா…” மறு நொடியே மாயமான காதலன்…. தலை, முகத்தில் படுகாயத்துடன் காதலி…. பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…

40 minutes ago

“அலறிய 3 மாத கர்ப்பிணி மனைவி…” கழுத்தை அறுத்து கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத…

1 மணத்தியாலம் ago

“கோழைகளும் துரோகிகளுமே அப்படிச் சொல்வார்கள்”…. அமெரிக்க ஆயுதப் பற்றாக்குறை வதந்திக்கு அதிபர் ட்ரம்ப் ஆவேசப் பதிலடி…!

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…

1 மணத்தியாலம் ago

“அன்பிற்குரியவர் தான்… ஆனா இது லூசுத்தனமான விமர்சனம்”…. உதயநிதியை பொளந்து கட்டிய திருமாவளவன்….!

திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…

1 மணத்தியாலம் ago

மக்களே உஷார்…. சிறுநீரகங்கள் செயலிழக்கும் ஆபத்து… மாத்திரை சாப்பிடும் முன் மத்திய அரசு வெளியிட்ட பகீர் எச்சரிக்கை….!

வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…

2 மணத்தியாலங்கள் ago