பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில், ஒரு பெண் தனது கணவரைக் கொன்று உடலை 20 கிலோமீட்டர் தொலைவில் வீசிவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் முகமது ஜலால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது மனைவி, தனது கணவரைக் கொலை செய்த பிறகு, சடலத்தைச் சாக்கு மூட்டையில் கட்டி, ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்துச் சென்று ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வீசியுள்ளார்.
இந்தக் கொடூரச் செயலைச் செய்து முடித்த பிறகு, அந்தப் பெண் நேராகக் காவல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம், “நான் என் கணவரைக் கொன்றுவிட்டேன், என்னை சிறையில் அடையுங்கள்” என்று கூறி சரணடைந்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், அவரை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்தப் பெண் காட்டிய இடத்திற்குச் சென்ற போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த முகமது ஜலாலின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், அதன் உச்சகட்டமாகவே இந்தத் துணிகரக் கொலையை அந்தப் பெண் செய்ததும் தெரியவந்துள்ளது. கணவரைக் கொன்றுவிட்டு சடலத்துடன் 20 கி.மீ தூரம் பயணித்த அந்தப் பெண்ணின் துணிச்சல் அப்பகுதி மக்களை உறைய வைத்துள்ளது. போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…