உத்தரப் பிரதேச மாநிலம் பலியாவில் உள்ள மனியர் பகுதி திகேடா தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் சிறுமிதான் ராகினி. எதிர்பாராத ஒரு விபத்தில் தனது ஒரு காலை இழந்த நிலையிலும், பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும் என்ற அவளது ஆர்வம் சிறிதும் குறையவில்லை. தினமும் ஒற்றைக் காலில் நொண்டி அடித்தபடியே பள்ளிக்கு வந்து, தனது கல்வித் தாகத்தால் அப்பகுதி மக்களின் அன்பைப் பெற்று வருகிறாள்.
ஒற்றைக் காலில் பள்ளிக்குச் செல்லும் சிரமத்தை வெல்வதற்காக, ராகினி தனது மாவட்ட ஆட்சியரிடம் ஒரு உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். “டி.எம் மாமா, எனக்கு ஒரு மிதிவண்டி வாங்கித் தாருங்கள். நான் தினமும் தவறாமல் பள்ளிக்கு வந்து படிப்பேன்” என்று அவரிடம் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
https://twitter.com/ashishpaswan0/status/2094772565109887213/video/1
உடல் குறைபாட்டையும் பொருட்படுத்தாமல் கல்வி கற்கத் துடிக்கும் ராகினியின் இந்த விடாமுயற்சி அனைவரின் நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது. அந்தச் சிறுமியின் பள்ளிப் பயணத்தை எளிதாக்கவும், அவளது கல்விக்கனவை நனவாக்கவும் மாவட்ட நிர்வாகம் விரைவில் மிதிவண்டி வழங்கி உதவும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
