தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த கே.கைலாசபுரம் கிராமத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், கூகுள் பே பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. நேற்று இரவு கீழக்கோட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகாராஜா பொருட்கள் வாங்கிவிட்டு கூகுள் பே மூலம் பணம் செலுத்தியுள்ளார். ஆனால், பணம் வங்கிக் கணக்கிற்கு வரவில்லை எனக் கடை உரிமையாளர் சுப்பிரமணியன் கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பால் வியாபாரி நடேஷ்குமார், கடை உரிமையாளருக்கு ஆதரவாகப் பேசி மகாராஜாவை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மகாராஜா, வீட்டிற்குச் சென்று பணம் எடுத்து வருவதாகக் கூறிவிட்டுச் சென்று, சிறிது நேரத்தில் கத்தியுடன் திரும்பி வந்து நடேஷ்குமாரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நடேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பியோடிய மகாராஜாவை நாரைக்கிணறு காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே விபத்தில் தாயை இழந்த நிலையில், தற்போது தந்தையையும் பறிகொடுத்துள்ள நடேஷ்குமாரின் இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை…
அசாம் மாநிலம் திப்ருகரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்த வாடகைதாரர் ஒருவர், தனது கடனை அடைப்பதற்காக வீட்டின்…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைதான் பகுதியில், பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிய கொடூரச்…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது…
பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்,…
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை…