ஐயோ போச்சு…! செல்போனைப் பறித்த திருடன்… சக்கரத்தில் சிக்கித் துடிதுடித்த பயணி… பகீர் சிசிடிவி காட்சி…!!

By Gayathri on ஆவணி 10, 2026

Spread the love

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் பனோலி ரயில் நிலையம் அருகே, ராஜஸ்தானைச் சேர்ந்த 32 வயதான ஆட்டோ ஓட்டுநரான அசோக் குர்ஜார் என்ற பயணி ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6-ஆம் தேதி ஜெய்ப்பூர் – பாந்த்ரா சூப்பர்பாஸ்ட் விரைவு ரயிலின் பொதுப்பெட்டி வாசல் அருகே அமர்ந்து அவர் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் பனோலி நிலையத்தை மெதுவாகக் கடக்கும்போது, பிளாட்பாரத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஓடிவந்து அசோக்கின் செல்போனைப் பறித்தார். தனது போனைத் திரும்பப் பிடிக்க பதற்றத்துடன் முயன்ற அசோக், நிலைதடுமாறி நடைமேடையில் விழுந்தார். சுமார் 100 மீட்டர் தூரம் ரயிலோடு இழுத்துச் செல்லப்பட்ட அவர், இறுதியில் தண்டவாளத்தில் விழுந்து சக்கரத்தில் சிக்கி தனது உயிரை இழந்தார்.

இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு, செல்போனைப் பறித்த திருடன் உடனடியாக தனது முகத்தை துணியால் மூடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்; அவனது கூட்டாளி ஒருவனும் கீழே கிடந்த பொருளை எடுத்துச் செல்வது அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. நெஞ்சைப் பதறவைக்கும் இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் இரண்டு குற்றவாளிகளையும் தீவிரமாகத் தேடி வருவதாக ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் எஸ்.கே. ராணா தெரிவித்துள்ளார். ஒரு செல்போனுக்காக நடந்த இந்த எதிர்பாராத உயிர்ப்பலி, ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.