ஐயோ என்ன கொடுமை இது?… அழகு குறித்த கவலையால் பறிபோன உயிர்… வீட்டில் விபரீத முடிவெடுத்த 18 வயது மாணவர்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

By Swetha on கார்த்திகை 18, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், 18 வயதான 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது உடல் தோற்றம் மற்றும் முடி உதிர்வு குறித்த கவலைகளால் அந்த மாணவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, அந்த மாணவர் தனது தோற்றம் குறித்து அடிக்கடி அதிருப்தியை வெளிப்படுத்தி வந்ததுடன், இதற்கு முன்பும் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனிமையிலேயே இருந்து வந்ததாகவும், எப்போதாவது தனது செல்போனில் விளையாடிக் கொண்டிருப்பார் என்றும் அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

   

சம்பவத்தன்று, மாணவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத்தினரால் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.