பூமிக்கு ஆபத்து?… சூரியனின் வளிமண்டலத்தில் பட்டாம்பூச்சி வடிவ துளை… நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்…!

By Divyamayakannan on புரட்டாதி 13, 2025

Spread the love

சூரியனில் ஒரு பெரிய பட்டாம்பூச்சி வடிவ கொரோனல் துளை இருப்பதாக நாசா சூரிய இயக்கவியல் ஆய்வகம் கண்டுபிடித்துள்ளது. சுமார் ஐந்து லட்சம் கிலோ மீட்டர் அகலம் உள்ள பட்டாம்பூச்சி துளை உள்ளதாம். செப்டம்பர் 11ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. இந்த அசாதாரண வடிவம் மற்றும் விண்வெளி வானிலை பாதிக்கும் திறன் உள்ளதால் கவனத்தை ஈர்த்துள்ளது. சூரியனின் மேற்புற அடுக்குகளில் தான் இது போன்ற துளை அமைந்துள்ளது. அந்த இடத்தில் தான் காந்த புலங்கள் திறந்து சூரியகாற்று விண்வெளியில் பரப்ப உதவும்மாம். நாளை செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் அந்த சூரியக்காற்று பூமியை அடைய வாய்ப்பு அதிகம். புவி காந்த புயல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.