அமெரிக்காவில் நடந்த வங்கிக் கொள்ளை சம்பவம் ஒன்றில், 70 வயது முதியவரான லாரன்ஸ் ஜான் ரிப்பிள் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் விரக்தியடைந்துள்ளார். வீட்டிற்கு செல்வதை விட சிறைச்சாலை வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்று நினைத்த அவர், ஒரு வங்கியை கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடித்த பிறகு, அங்கிருந்து தப்பிச் செல்லாமல், போலீசார் வரும் வரை அமைதியாக வங்கியிலேயே காத்திருந்தார்.
போலீசாரிடம் தனது செயலுக்கான காரணத்தைத் தெரிவித்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவரது சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். ரிப்பிளுக்கு சிறைத் தண்டனை விதிக்காமல், அதற்குப் பதிலாக 6 மாதங்கள் வீட்டுக் காவலில் இருக்கவும், சமூக சேவை செய்யவும் உத்தரவிட்டார்.
