மகாராஷ்டிரா மாநிலத்தில், பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்காக ‘ராபிடோ’ நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ‘பிங்க்’ இருசக்கர வாகனச் சேவையில், பெண் ஓட்டுநருக்குப் பதிலாக ஆண் ஓட்டுநர் வந்த சம்பவம் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஷாலினி என்ற பெண், பெண்கள் மட்டுமே இயக்கும் ‘ராபிடோ பிங்க்’ சேவையின் கீழ் இருசக்கர வாகனத்தைப் பதிவு செய்துள்ளார். செயலி வழியே பெண் ஓட்டுநரின் புகைப்படம் காண்பிக்கப்பட்ட நிலையில், அவரைத் தொடர்புகொண்ட நபர் ஒரு ஆண் என்பது தெரியவந்தது. தான் பெண் ஓட்டுநரை எதிர்பார்ப்பதாக அந்தப் பெண் கூறியதற்கு, அந்த ஓட்டுநர் “நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ” என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.
https://www.instagram.com/reel/Dd5xiZpgFef/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==
பாதுகாப்பு அச்சம் காரணமாக அந்தப் பெண் பயணத்தை ரத்து செய்த நிலையில், நிறுவனத்தின் தவறுக்காக அந்தப் பெண்ணிடமே ரத்து கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்பட்டுள்ளது. தனது முகவரி மற்றும் முகத்தை அந்த ஆண் பார்த்துள்ளதால் தனது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அந்தப் பெண் சமூக வலைதளத்தில் கதறி வீடியோ வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, ராபிடோ நிறுவனம் அவருக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளதுடன், இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு ரத்துக் கட்டணம் திருப்பித் தரப்படும் எனத் தெரிவித்துள்ளது.
