உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு தங்கும் விடுதி அறையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெய்விகாஸ் (23) என்ற இளைஞர், தனது சகோதரனின் மைத்துனியான பிரியா கேசரி என்பவரைத் திருமணம் செய்ய விரும்பியுள்ளார். ஆனால், பிரியாவுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்ததால், அவர் ஜெய்விகாஸின் விருப்பத்தை நிராகரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெய்விகாஸ், சம்பவத்தன்று மதியம் 1 மணியளவில் பிரியாவுடன் வாரணாசியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். இரவு 10 மணியளவில் இரவு உணவு ஆர்டர் எடுப்பதற்காக ஹோட்டல் ஊழியர்கள் அந்த அறையின் கதவைத் தட்டியபோது, நீண்ட நேரமாகியும் உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. சந்தேகமடைந்த ஊழியர்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையின் குளியலறையில் பிரியா சடலமாகக் கிடந்தார். மேலும், அறைக்குள் ஜெய்விகாஸும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த ஆத்திரத்தில் பிரியாவைக் கொலை செய்துவிட்டு, ஜெய்விகாஸ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…