உயிரை விட சிலிண்டர் முக்கியமா…? நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு…” குப்பைகள் நிறைந்த வெள்ள நீரில் சிலிண்டர்களை மீட்க முயன்ற நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 27, 2026

Spread the love

வடக்கு நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளப்பெருக்கில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். திபெத் எல்லையோர பகுதியான ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நுவாகோட் மற்றும் தாடிங் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் மரக்கட்டைகள் நிறைந்த சேற்று நீரில் இறங்கி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை மீட்க சிலர் தங்களது உயிரைப் பணயம் வைக்கும் 70 வினாடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்தகைய ஆபத்தான சூழலில் பொருளுக்காக உயிரைப் பணயம் வைப்பதா என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கினால் 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள், நீர்மின் நிலைய ஊழியர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பலர் காணாமல் போயுள்ளனர். நேபாள ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.