டிராக்டரா..? இல்லை சொகுசு ஹோட்டலா..? ஹரியானா வாலிபரின் மிரட்டலான ஐடியா… நெட்டிசென்கள் ஷாக்…!!

Spread the love

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த ரோக்கி ஷாபுரியா என்ற விவசாயி, தனது மைத்துனரின் யோசனைப்படி 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு டிராக்டரை வாங்கினார். பின்னர், கூடுதலாக 4 லட்சம் ரூபாய் செலவழித்து, அந்த டிராக்டரை அனைத்து நவீன வசதிகளும் கொண்ட ஒரு நடமாடும் சொகுசு வீடாக மாற்றியுள்ளார். மொத்தம் 14 லட்சம் ரூபாய் செலவில் உருவான இந்த தனித்துவமான டிராக்டர், தற்போது செல்லும் இடமெல்லாம் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த டிராக்டருக்குள் படுக்கை , சமையலறை, விசிறி, சன்ரூஃப் , பின் பக்க கேமரா மற்றும் குப்பைத்தொட்டி போன்ற பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மலைப்பகுதிகளில் பயணிக்கும்போது டிராக்டர் நிலைதவறி தூக்காமல் இருக்க, அதன் முன்பகுதியில் 150 கிலோ எடையுள்ள பம்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 பேர் வரை அமர முடியும் என்றும், 5 பேர் தாராளமாகப் படுத்து ஓய்வெடுக்கலாம் என்றும் ரோக்கி தெரிவித்துள்ளார்.

ரோக்கி தனது மனைவி மற்றும் மகனுடன் இந்த டிராக்டரிலேயே பல்வேறு ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே சார் தாம், பத்ரிநாத், கேதார்நாத், லடாக் மற்றும் சியாச்சின் போன்ற இடங்களுக்குச் சென்றுள்ள இவர், தற்போது நேபாளப் பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகருக்கு வந்து மகாகாளேஸ்வரரைத் தரிசித்துள்ளார். இந்த டிராக்டர் பயணம் தங்களுக்கு ஹோட்டல் செலவுகளை மிச்சப்படுத்துவதோடு, நினைத்த நேரத்தில் ஓய்வெடுத்துப் பயணிக்கப் பெரிதும் உதவுகிறது என அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Swetha

Recent Posts

“அம்மா அந்த சித்தப்பா என்னை..” 8 வயது சிறுமியை கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று…! விளையாட சென்ற போது அரங்கேறிய கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). சிமெண்ட் கடை மற்றும் நில…

5 seconds ago

“தப்பு பண்ணிட்டேன்… நான் அப்படி சொல்லிருக்க கூடாது…” ஐ.ஐ.டி பாம்பே மாணவர் தற்கொலை… மகனை இழந்த தந்தையின் கண்ணீர்…. பெரும் சோகம்…!!

மும்பை ஐ.ஐ.டி-யில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வாகோடே என்ற மாணவர், கடந்த 18-ம் தேதி தூக்கிட்டுத்…

11 minutes ago

ராங் ரூட்டில் போறீங்க…” பைக்கில் வந்து அட்ராசிட்டி… ஊழியரை கொடூரமாக தாக்கி கொன்ற கும்பல்…. பதற வைக்கும் CCTV காட்சிகள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் மாவட்டம் கோகாமேடி சுங்கச்சாவடியில் 21 வயதான காளு லால் என்ற வாலிபர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.…

33 minutes ago

“என்ன தான் நடக்குது…?” ஒன்றும் அறியாமல் நின்ற வாலிபர்…. திடீரென வந்து சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்…. நொடியில் நடந்த சம்பவம்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் வாலட்டர்கஞ்ச் போலிஸ் எல்லைக்குட்பட்ட கணேஷ்பூர் பகுதியில், இளைஞர் ஒருவர் சாலையோரமாக அமைதியாக நின்று…

44 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பைக்…. 4 பேர் துடிதுடித்து பலியான சோகம்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் நூ பகுதியில் அமைந்துள்ள தில்லி தர்பார் உணவகம் எதிரே, அதிவேகமாக வந்த வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும்…

56 minutes ago

ரோட்டைக் கடந்த ரகசிய முதலை… 8 அடி ஆழப் பள்ளத்தில் சிக்கிய திக் திக் நிமிடங்கள்…. வீடியோ வைரல்….!

மும்பையின் ஆரே மெட்ரோ காம்ப்ளக்ஸ் வளாகத்திற்குள் உள்ள மின்சாரக் குழாயில் சிக்கியிருந்த சுமார் 3 அடி 7 அங்குலம் நீளமுள்ள…

1 மணத்தியாலம் ago