ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த விபத்தில், தாய், தந்தை, மகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு. மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு, சாமான்களை ஏற்றிய லாரி ராமநாதபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதே போல் ராமநாதபுரத்தில் இருந்து ஐந்து நபர்களைக் கொண்ட கார் குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இன்று காலை 3 மணி அளவில் பரமக்குடி அருகே, இருவழி சாலையில் சென்று கொண்டிருந்த காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் டிரைவர் காளீஸ்வரன் (28), ஜமுனா (55), ரூபிணி (30) ஆகியோர் சம்பவ இடத்திலே பலியாகினர். மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் (65) என்பவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், அரசு நிர்வாகத்தில் அதிரடியான பல மாற்றங்களைச் செய்து…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பொறுப்பேற்று பத்து நாட்களே ஆகியுள்ள நிலையில், அவர்தம் அதிரடியான மக்கள் நலத் திட்டங்களும் கார்ப்பரேட்…
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில்,…
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 9:30 மணிக்கு அமைச்சர் ராஜ்மோகன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக…
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்த…
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மின்சார…