ஜூலை 16ஆம் தேதி, சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனும் குரு பகவானும் குருவின் உச்ச ராசியான கடகத்தில் ஒன்றிணைகின்றனர். ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரிய சேர்க்கை, ஒரு மாதம் வரை நீடிக்கவுள்ளது. அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம் மற்றும் கௌரவத்தை அதிகரிக்கும் யோகமாகக் கருதப்படும் இந்த இணைப்பால், குறிப்பாக நான்கு ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சி, தொழில் வெற்றி மற்றும் புதிய நல்வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேர்க்கையால் மேஷ ராசியினருக்கு 4-ஆம் வீட்டில் இந்த இணைவு நிகழ்வதால் வருமான உயர்வு, தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்ப மகிழ்ச்சி உண்டாகும்; உயர் அதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வும் கிடைக்கலாம். ரிஷப ராசியினருக்கு 3-ஆம் வீட்டில் அமையும் இந்த சேர்க்கையால் தன்னம்பிக்கை கூடி, வியாபாரத்தில் நல்ல லாபமும், முந்தைய முதலீடுகள் மூலம் அதிக நிதி ஆதாயமும் கிடைக்கும்.
மேலும், கடக ராசியினருக்கு லக்னத்திலேயே (முதல் வீடு) இந்த இணைவு நடப்பதால் ஆளுமைத் திறன் மேம்பட்டு, சொத்துக்கள் மூலம் லாபமும், பணியிடத்தில் சம்பள உயர்வுடன் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். துலாம் ராசியினருக்கு 10-ஆம் வீட்டில் இந்த சேர்க்கை ஏற்படுவதால், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், குறிப்பாக அரசு பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழலும், நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடியும் யோகமும் உண்டாகும்.
