டேய் எப்புட்றா..! “பாம்பு உடம்பில் தங்க மோதிரம் ..? கேரளாவில் நடந்த வினோதக் கூத்து… வெளியான பகீர் பின்னணி..!!

By Soundarya on சித்திரை 30, 2026

Spread the love

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், பாம்பு ஒன்றின் உடலில் தங்க மோதிரம் சிக்கிய வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு வீட்டிற்குள் புகுந்த அந்தப் பாம்பின் உடலில், மேசை மீது இருந்த மோதிரம் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது. பாம்பின் உடல் அமைப்புடன் மோதிரம் மிக நெருக்கமாகப் பிணைந்திருந்ததைக் கண்ட வீட்டிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பாம்பை லாவகமாகப் பிடித்தனர். அதன் உடலில் இறுக்கமாகச் சிக்கியிருந்த தங்க மோதிரத்தை எவ்விதக் காயமுமின்றி பத்திரமாக நீக்கினர். பின்னர், அந்தப் பாம்பை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தனர். இந்த வினோத நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.