“போதும்… ஓடிப் போயிரு…!” – கரடிக்கே ‘வார்னிங்’ கொடுத்த கெத்தான பெண்… சற்றும் எதிர்பாராத ட்விஸ்ட்… சோஷியல் மீடியாவை அதிரவைக்கும் திக் திக் வீடியோ…!!

By Swetha on ஆனி 27, 2026

Spread the love

கனடாவில் காடுகளுக்கு நடுவே உள்ள ஒரு மலையேற்றப் பாதையில் தனது செல்லப் பிராணகான நாயுடன் சென்ற பெண்ணை, ஒரு பெரிய கிரிஸ்லி கரடி துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயமுறுத்தும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கரடி தன்னை நோக்கி வருவதைக் கண்டு அப்பெண் பதற்றமடையாமல் மெதுவாக பின்னோக்கி நகர்கிறார். அப்போது அந்த கரடி திடீரென அவர்களை நோக்கி வேகமாக பாய்ந்து வரத் தொடங்குகிறது. இதனால் பயந்த அப்பெண், சற்றும் மனதை தளரவிடாமல் கரடியை நேருக்கு நேர் பார்த்து, “போதும், இங்கிருந்து போய்விடு! நில்!” என்று மிகவும் உரத்த குரலில் தைரியமாக கத்துகிறார்.

   

அப்பெண்ணின் தொடர்ச்சியான எச்சரிக்கைக் குரலினாலும், அவர் காட்டிய தைரியத்தினாலும் அந்த கிரிஸ்லி கரடி ஒருகட்டத்தில் அவர்களைத் துரத்துவதைக் கைவிட்டு, அடர்ந்த காட்டுக்குள் திரும்பிச் சென்றது. இக்கட்டான சூழ்நிலையிலும் அப்பெண் காட்டிய சமயோசித புத்தியும், துணிச்சலும் பலராலும் பாராட்டப்பட்டு வரும் அதே வேளையில், வனப்பகுதிகளுக்குச் செல்லும்போது கரடி விரட்டி ஸ்ப்ரே போன்ற பாதுகாப்பு உபகரணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.