“மோடிஜி எனக்கு ஆதார் அட்டை கொடுங்க” இந்தியாவை விட்டு போக மனமில்லாமல் அழுத வெளிநாட்டவர்… வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

இந்தியா வரும் வெளிநாட்டவர்கள் இங்கிருந்து புறப்படும்போது ஆதார் அட்டை கோரினால், அவர்கள் இநாட்டை விட்டுச் செல்ல மனமில்லாமல் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். அதே போன்ற ஒரு நிகழ்வுதான் ‘கப்ருஜி’  என்ற வெளிநாட்டவருக்கும் நடந்துள்ளது. இந்தியாவை விட்டு வெளியேற இன்னும் எட்டு மணிநேரம் மட்டுமே உள்ள நிலையில், அவர் மிகவும் சோகமாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இந்தியாவை விட்டுச் செல்ல மனமின்றி அழத் தோன்றுவதாகவும், இங்கு அனைவருக்கும் தேவையான அனைத்தும் கிடைப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் வீடுகளை சுத்தம் செய்ய ஆட்கள் கிடைப்பது முதல் சுவையான தெரு உணவுகள் வரை அனைத்தும் எளிதாகக் கிடைப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். இந்த வீடியோவை கண்ட இந்தியர்கள் நெகிழ்ச்சியடைந்து, கப்ருஜியைத் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு வருமாறு அன்புடன் அழைத்து வருகின்றனர். இதற்கு முன்பு இந்தியாவிற்கு வந்து சென்ற பல வெளிநாட்டவர்களும் கப்ருஜியின் இந்த உணர்வுப்பூர்வமான கருத்தை ஆமோதித்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.