ஐயோ… இது என்ன புதுக் கூத்து?… டிராஃபிக் நடுவில் சாக்கடைக்குள்… நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண்… டெல்லியில் விநோத சம்பவம்… நெட்டிசன்களை மிரள வைத்த ஷாக்கிங் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 20, 2026

Spread the love

NH-48-ன் மகிபல்பூர் பகுதியில் ஒரு வெளிநாட்டுப் பெண் சாலையோர சாக்கடையில் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் வியப்படையச் செய்தது.

தேசிய நெடுஞ்சாலையின் பரபரப்பான போக்குவரத்து மற்றும் கடுமையான சூழலுக்கு மத்தியில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் நடந்து சென்ற விதம் பலரையும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது. இதைப் பார்த்த பல வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, அந்தப் பெண்ணின் அமானுஷ்யமான செயலையும் நடமாட்டத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

   

https://twitter.com/ndtv/status/2112445990347395313/video/1

   

சமூக வலைத்தளங்களில் இக்காணொளி வேகமாகப் பரவி வரும் நிலையில், அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர். இச்சம்பவம் தலைநகரில் உள்ள பொது உள்கட்டமைப்புகள் மற்றும் அவசரக் காலப் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் பொதுமக்களிடையே எழுப்பியுள்ளது.