சீச்சீ… என்ன கொடுமை இது?… பள்ளி மாணவருடன் தகாத உறவு வைத்திருந்த பெண் ஆசிரியர்… செல்போனில் சிக்கிய ஆதாரங்கள்… அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 18, 2026

Spread the love

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது மாணவருடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 4-ம் தேதி மாணவரின் செல்போனை அவரது தாயார் சோதனை செய்தபோது, ஆசிரியரின் ஆபாசப் புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இருவரும் காதல் உறவில் இருந்ததும், அக்டோபர் 31-ம் தேதி ஆசிரியரின் காரில் பாலியல் உறவில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மாணவரின் செல்போனை தடயவியல் ஆய்வு செய்த காவல்துறையினர், பாலியல் செயல்கள் குறித்து ஆசிரியர் அனுப்பிய பல்வேறு குறுஞ்செய்திகளைக் கண்டறிந்துள்ளனர்.

   

இதனையடுத்து, நவம்பர் 4-ம் தேதி தனது பணியை ராஜினாமா செய்த மியா, நவம்பர் 11-ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,05,000 அமெரிக்க டாலர் பிணைத்தொகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், மாணவர்களுடன் தொடர்பு கொள்ளவும் இணைய வசதி கொண்ட சாதனங்களைப் பயன்படுத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.