“உன் மகனை வீட்டிற்குள் வைத்து….” மிரட்டிய கும்பல்…! அவசரமாக சொத்துக்களை விற்று ரூ.2 கோடி கொடுத்த ஐடி ஊழியர்… போலீஸ் விசாரணை…!!

Spread the love

பெங்களூரு விக்ஞான் நகரைச் சேர்ந்த மென்பொருள் பெண் ஊழியர் ஒருவரிடம், ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் மர்ம கும்பல் 2.05 கோடி ரூபாய் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறித் தொடர்புகொண்ட அந்த கும்பல், பபிதா தாஸின் ஆதார் எண்ணைப் பயன்படுத்திப் போதைப்பொருள் கடத்தப்பட்டதாக மிரட்டியுள்ளது.

மும்பை போலீஸ் அதிகாரிகள் போல வேடமிட்டு வீடியோ காலில் மிரட்டிய அவர்கள், பபிதாவையும் அவரது 10 வயது மகனையும் வீட்டிற்குள்ளேயே சிறைபிடிப்பது போல் பயமுறுத்தியுள்ளனர்.

இந்த மிரட்டலுக்குப் பயந்து, கடந்த ஜூன் முதல் நவம்பர் வரை தனது சேமிப்பு மற்றும் சொத்துக்களை விற்றுப் பபிதா பணத்தை அனுப்பியுள்ளார். இதற்காகத் தனது ஒரு பிளாட் மற்றும் இரண்டு நிலங்களை அவசர அவசரமாகக் குறைந்த விலைக்கு விற்றதோடு, வங்கிக் கடனும் வாங்கியுள்ளார். இறுதியில் தடையின்மை சான்றிதழ் வாங்க நேரடியாகக் காவல் நிலையம் சென்றபோதுதான், தான் ஒரு மிகப்பெரிய சைபர் மோசடியில் சிக்கியதை அவர் உணர்ந்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சைபர் குற்றங்களால் சுமார் 5,474 கோடி ரூபாய் மக்கள் இழந்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. பொதுமக்கள் யாரேனும் போனில் மிரட்டினால் பயப்படாமல் காவல்துறையை அணுக வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Devi Ramu

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

49 minutes ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

59 minutes ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

1 மணத்தியாலம் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago