“என் பிள்ளைக்கு கல்யாணம் ஆகல…” உயிரை விட்ட தந்தை… அடுத்த நொடியே மகள் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

By Devi Ramu on பங்குனி 9, 2026

Spread the love

தந்தையும் மகளும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் வடபழனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவருக்கு 57 வயது ஆகிறது. இவரது மகள் பாக்கியம். 30 வயது ஆகியும் மகளுக்கு திருமணம் ஆகாததால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணகுமார் தற்கொலை செய்து கொண்டார்.

தந்தை இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து மன உளைச்சலில் இருந்த பாக்கியம் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.