சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான இந்தச் சம்பவம், ஒடிசா மாநிலத்தின் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள கண்டாபஞ்சி அரசு மருத்துவமனைக்கு வெளியே நடந்ததாகும். இங்குத் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒரு தந்தை, தனது தீவிர நோய்வாய்ப்பட்ட சிறுவனை சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
மருத்துவர்கள் பரிசோதித்துச் சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்த நிலையில், சட்டப்பூர்வ நடைமுறைப்படி பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், பிரேதப் பரிசோதனை செய்ய விரும்பாத அந்தத் தந்தை, தனது குழந்தையின் உடலைத் தோளில் தூக்கிக் கொண்டு அழுதபடியே மருத்துவமனையை விட்டு வெளியேற முயன்றபோது இக்காட்சி படம்பிடிக்கப்பட்டது.
https://twitter.com/Mahamud313/status/2090462458154733603/video/1
மருத்துவமனை நிர்வாகமும் போலிசாரும் பின்னர் தந்தையைச் சமாதானப்படுத்தி, சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்த பிறகு, மருத்துவமனையின் அமரர் ஊர்தி மூலமாகவே உடலை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக விளக்கமளித்துள்ளனர். முழு விவரமும் தெரியாமல் ஒரு பகுதியை மட்டும் படம்பிடித்துப் பரப்பியதால் இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
