ஐயோ கடவுளே… இன்ஸ்டாகிராம் தோழியை வீட்டில் தங்க வைத்த குடும்பம்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி… விசாகப்பட்டினத்தில் பரபரப்பு சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 16, 2026

Spread the love

விசாகப்பட்டினத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண் ஒருவர், வீட்டிற்குள் நுழைந்து நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கய்யபாலம் நான்காம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மனேஹள்ளி நீரஜா என்பவருக்கு, இன்ஸ்டாகிராம் வாயிலாக அப்பெண் அறிமுகமாகியுள்ளார்.

இந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி நீரஜாவின் வீட்டிற்குச் சென்ற அப்பெண், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அங்கேயே சில நாட்கள் தங்கியுள்ளார். வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையைப் பெற்ற அவர், படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளைக் குறிவைத்துள்ளார்.

   

சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த அப்பெண், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் 11.3 கிராம் எடையுள்ள வைர நெக்லஸ், பிற வைர நகைகள் மற்றும் தங்க ஆபரணங்களை எடுத்துக்கொண்டு மாயமானார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நீரஜா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.