பீகார் மாநிலம் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே ஊழியர்கள் மது அருந்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வைரல் வீடியோவில், மூன்று பெண் தூய்மைப் பணியாளர்களும் ஒரு ஆண் ஊழியரும் மருத்துவ வளாகத்திற்குள் அமர்ந்து மது அருந்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, பெண்களில் ஒருவர் கிளாஸ்களில் மதுவை ஊற்றி வழங்குவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
பீகாரில் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள நிலையில், ஒரு அரசு மருத்துவமனையின் அவசரப் பிரிவு அருகே நடந்த இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனையை அதிகரிக்கும் வகையில், புதிதாக 20 வகையான மதுபானங்களை அறிமுகம் செய்ய…
குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில், குடும்பத்தின் சமயச் சடங்கு பாரம்பரியம் தொடர்பான தகராறில் 10 வயது சிறுவன் ஒருவன் அவனது தந்தையாலேயே…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகை தந்த தமிழக முதல்வர் ச.ஜோசப்…
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பள்ளிகளுக்கான அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சுமார் ரூ.400 கோடி வரை லஞ்சம் கைமாறியதாக…
ஆந்திரப் மாநிலத்தில் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக காரானது கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் மூழ்கிய…
தீபாவளிப் பண்டிகையைக் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடிய மக்கள், தங்களின் சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வர வசதியாகத் தீபாவளிக்கு மறுநாளான…