ஐயோ… என்ன கொடுமை இது?… அவசர சிகிச்சைப் பிரிவு அருகே மதுவிருந்து… அரசு மருத்துவமனையில் பகீர் காட்சிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 16, 2026

Spread the love

பீகார் மாநிலம் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே ஊழியர்கள் மது அருந்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வைரல் வீடியோவில், மூன்று பெண் தூய்மைப் பணியாளர்களும் ஒரு ஆண் ஊழியரும் மருத்துவ வளாகத்திற்குள் அமர்ந்து மது அருந்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, பெண்களில் ஒருவர் கிளாஸ்களில் மதுவை ஊற்றி வழங்குவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

   

பீகாரில் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள நிலையில், ஒரு அரசு மருத்துவமனையின் அவசரப் பிரிவு அருகே நடந்த இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.