“புதுக்கோட்டையில் அதிர்ச்சி”…. முதல்வர் விஜய்யை பார்க்க வந்த வேட்பாளருக்கு நேர்ந்த கொடூரம்… பூட்டிய கதவால் வெடித்த சர்ச்சை….!

Spread the love

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகை தந்த தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்யை சந்திக்க முயன்ற தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.ஷெரீப் மற்றும் அவருடன் வந்தவர்கள் 3 மணி நேரம் ஒரு சிறிய அறையில் வைத்துப் பூட்டப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரான கே.எம்.ஷெரீப், புதுக்கோட்டை மக்களின் கோரிக்கைகள் அடங்கிய புத்தகம் ஒன்றைக் கொடுப்பதற்காகத் தமக்கு வழங்கப்பட்டிருந்த வி.ஐ.பி பாஸுடன் சென்றுள்ளார். அவருடன் கட்சியின் மாவட்டச் செயலாளர் யூசுப் ராஜா, காங்கிரஸ் வழக்கறிஞர் சந்திரசேகரன் மற்றும் இப்ராஹிம் பாபு ஆகியோரும் சென்றுள்ளனர். ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் பயனாளிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை எனக் கூறி மறுத்துள்ளனர்.

https://www.facebook.com/hashtag/tvkcandidate?__eep__=6&fref=mentions&ref=embed_video

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த டி.ஆர்.ஓ குழந்தைசாமி மற்றும் காவல்துறை அதிகாரி (டி.ஐ.ஜி) ஈஸ்வரன் ஆகியோர் அவர்களைப் பக்கத்து அறையில் அமருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே வெளிக்கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டுள்ளது. காலை 9:45 மணி முதல் மதியம் 1:30 மணி வரை சுமார் மூன்று மணி நேரம் குடிதண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி கூட இல்லாமல் அந்தச் சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற பின்னரே அவர்கள் வெளியே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த அநீதி குறித்துக் கடுமையாகச் சாடி கே.எம்.ஷெரீப் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாங்கள் ஒன்றும் திருடவோ கொள்ளையடிக்கவோ வரவில்லை. வேட்பாளரான என்னைச் சந்திக்க முடியாது என்று கூறி வெளியே அனுப்பியிருந்தால் கூடச் சென்றிருப்போம்; ஆனால் இப்படி பூட்டி வைத்தது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “நான் ஒரு பாரம்பரிய அரசியல்வாதி அல்ல, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் போராட்டக்காரன். என்னை மூன்று மணி நேரம் அடைத்து வைத்ததற்கு மாவட்ட ஆட்சியரும் காவல்துறை அதிகாரியும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை என் போராட்டம் தொடரும், நிச்சயம் முதல்வரைச் சந்தித்து இது குறித்துப் புகார் அளிப்பேன்” என்றும் அவர் அந்த வீடியோவில் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

அதிர்ச்சி… விடுதி அறையில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை… கையில் எழுதப்பட்ட திடுக்கிடும் மரண வாக்குமூலம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டம், ஜி. கொத்தபள்ளியில் இயங்கி வரும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா விடுதியில் இடைநிலை…

11 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… படிக்க அனுப்பி வச்சா இங்க என்னடா பண்றீங்க?… பல லட்சம் பணத்தை அழித்து… விடுதிகளில் ரகசிய மதுக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் நீட் மாணவர்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இன்றைய சூழலில் லட்சக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று, சிறந்த மருத்துவக் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள…

31 minutes ago

தூக்க போறாங்க CM சார்…. தவெக முகாமில் அதிருப்தியில் உள்ள 70 MLA-க்கள்…. திமுக போடும் பலே திட்டம்….. தமிழக அரசியலில் வெடிக்கப் போகும் ப்ளாஸ்ட்….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், குறிப்பாக நவம்பர் 10-க்குப் பின் மாநிலத்தில் பெரும் அரசியல் மாற்றங்கள்…

37 minutes ago

திக்… திக்… அந்த இரவில் என்ன நடந்தது?… இளைஞர் மரணத்தில் 10 பேர் கொண்ட கும்பலின்… திடுக்கிடும் பின்னணி… கர்நாடகாவில் நடந்த கொடூர சம்பவம்…!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் அஜ்ஜர்காட் மாவட்ட மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட பிரதீப் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, பெர்டூரைச்…

40 minutes ago

BREAKING: கனமழை எதிரொலி…. முதல் மாவட்டமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ….!

முரசு புயல் காரணமாக கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ள நிலையில்,…

42 minutes ago

ரூ.420 கோடி ஊழல்…. “120 கேள்விகள்… உறைந்துபோன அறிவாலயம்”…. முன்னாள் அமைச்சரைச் சுழற்றிடிக்கும் ‘செக்-மேட்’ வியூகம்….!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை…

45 minutes ago