இந்தூர் இண்டஸ்ட்ரி ஹவுஸ் பகுதியில் 2025 ஏப்ரல் 5-ம் தேதி தற்கொலை செய்துகொண்ட 27 வயது இளைஞர் மணீஷ் யாதவ் விவகாரம், 10 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஒரு வீடியோ ஆதாரத்தால் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சம்பவத்தின்போது பறிமுதல் செய்யப்பட்ட மணீஷின் அலைபேசியை எம்ஐஜி (MIG) போலீசார் சமீபத்தில் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். அதில் மணீஷ் இறப்பதற்கு முன் பதிவு செய்த உருக்கமான 12 நிமிட வீடியோ கண்டறியப்பட்டுள்ளது, இது வழக்கின் போக்கையே மாற்றியுள்ளது.
அந்த வீடியோவில், நர்மதா காலனியைச் சேர்ந்த மணீஷ் தான் ஒரு பெண்ணை நீண்டகாலமாகக் காதலித்ததாகவும், ஆனால் சமீபகாலமாக அந்தப் பெண் தன்னைப் புறக்கணித்துவிட்டு வேறொருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தனக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகக் குறிப்பிட்டுள்ளார். “ஆண்களே யாரையும் காதலிக்காதீர்கள். பெண்களே ஆண்களின் இதயத்தோடு விளையாடாதீர்கள்” என மிக உணர்ச்சிவசப்பட்டுப் பேசியுள்ள அவர், தனது மரணத்திற்கு காரணமானவர்களின் பெயர்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ ஆதாரம் வெளியானதைத் தொடர்ந்து, மணீஷின் தாயார் உமா யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடியோவில் தெளிவாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது 10 மாதங்களாகியும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என இந்தூர் காவல்துறைக்கு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை நிலவும் சூழல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது.…