கடன் பிரச்சனை தீரும்… லாபம் எகிறும்… சனியின் பெயர்ச்சியால் அதிரடிப் திருப்பம்… இனி ‘அதிர்ஷ்ட மழையில்’ நனையப்போகும் 4 ராசிகள்… லிஸ்டில் உங்க ராசி இருக்கா?…

By Swetha on ஆடி 29, 2026

Spread the love

நவக்கிரகங்களில் ‘கர்ம காரகன்’ மற்றும் ‘ஆயுள் காரகன்’ என்று போற்றப்படும் சனி பகவான், மனிதர்களின் நல்வினை தீவினைகளுக்கு ஏற்பப் பலன்களைத் தரும் ‘நீதிபதி’யாகத் திகழ்கிறார். தர்மத்தின் நாயகனான இவர், கடுமையாக உழைப்பவர்களையும் நேர்மையாளர்களையும் ஒருபோதும் கைவிடுவதில்லை. கடந்த காலங்களில் கண்ட சனி, அஷ்டம சனி அல்லது ஏழரை சனியின் பிடியில் சிக்கி, உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் அங்கீகாரமும் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளான பலருக்கு இந்த வரவிருக்கும் சனிப் பெயர்ச்சி ஒரு புதிய விடியலைத் தரவுள்ளது.

சனியின் கோச்சார ரீதியான சுபப் பார்வையினாலும், ஸ்தான பலத்தினாலும் நான்கு ராசியினர் தங்களது உழைப்பிற்கு ஏற்ற மகத்தான அங்கீகாரத்தைப் பெறப் போகிறார்கள். சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசியினருக்கு, சனி பகவான் தர்ம-கர்மாதிபதியாகப் பரிணமித்து மிகச் சாதகமான பலன்களை வழங்கவுள்ளார். சனி பகவானின் இந்த அமைப்பால் ரிஷப ராசியினருக்கு பாக்ய ஸ்தானமும் கர்ம ஸ்தானமும் பலமடைந்து, இதுவரை தொழிலில் இருந்துவந்த மந்த நிலை முற்றிலும் விலகும்.

   

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குக் காத்திருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் நிச்சயமாகக் கிடைக்கும். மேலதிகாரிகள் திறமையை உணர்ந்து புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மேலும் ‘தன ஆகர்ஷணம்’ கூடி, தொழில் ரீதியான பயணங்கள் மூலம் எதிர்பாராத லாபமும் உண்டாகும். இதனால் நீண்டநாட்களாக இருந்துவந்த கடன் சுமைகள் நிவர்த்தியாகி, பொருளாதார மேன்மையையும் உழைப்பிற்கான உரிய அங்கீகாரத்தையும் பெறப் போகிறார்கள்.