திரிசூலி பாஜாரில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நான்கு வீடுகள் வரிசையாக அடித்துச் செல்லப்பட்டன. அந்த இடத்திலேயே, கழுத்துப்பட்டியோடு கூடிய கருப்பு-வெள்ளை நிற நாய் ஒன்று அங்கிருந்து நகர மறுத்து நிற்கிறது. அரை டஜன் ஜேசிபிக்களும் மீட்புப் பணியாளர்களும் சுற்றியுள்ள மரக்கட்டைகள், வண்டல் மண் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாலும், அது தொடர்ந்து அதே சேற்றுப் பகுதியிலேயே நின்றுகொண்டிருக்கிறது.
அப்பகுதிக்கு வரும் புதிய மனிதர்களைக் கண்டு அந்நாய் எவ்வித எதிர்வினையும் ஆற்றுவதில்லை. அது தன் வாலைக்கூட ஆட்டாமல், முன்பிருந்த வீடுகளில் ஒன்றின் முகப்பு வாசல் பகுதிக்கு மீண்டும் மீண்டும் திரும்பி வந்தபடியே இருக்கிறது.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் பிக்ரம் தாபா TOI நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் பிஸ்கட்டுகளைக் கொடுத்து, பலவிதமான செல்லப் பெயர்களைச் சொல்லி அதை அழைக்க முயற்சி செய்தோம். ஆனால், அது தன் தலையைக்கூட திருப்பிப் பார்க்கவில்லை” என்று வேதனையோடு தெரிவித்துள்ளார்.
மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெக்கான் பேலஸ் அருகே நடைபெற்ற இக்கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்கிட்…
சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டத்தில் உள்ள ராய்கர் சாலையில், வேலை முடிந்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் தங்களது வீடுகளுக்குச்…
ஜைப்பூர் உயிரியல் பூங்காவில் புல் வெட்டச் சென்ற 7-8 பெண்களில் சுகுணா தேவி என்ற பெண் கூண்டிலிருந்து தப்பியோடிய புலியால்…
மும்பையின் மலாத் மேற்கு பகுதியில் உள்ள சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் 34 வயது பெண்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…
சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…