மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் செல்லப் பிராணி நாய் ஒன்றினால் கடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் சிறுமியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில், சிறுமி நடந்து செல்லும்போது நாய் திடீரென பாய்ந்து வந்து கடிப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில், சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்களும் அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/nextminutenews7/status/2105888824354287750/video/1
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், நாயின் உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். செல்லப் பிராணிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தவறியது மற்றும் அலட்சியமாகச் செயல்பட்டது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
