இயக்குனர் மிஷ்கின் விஜய் சேதுபதியை வைத்து இயக்கப் போகும் டிரெயின் திரைப்படத்தில் இவரே இசையமைப்பாளராக மாறி இருக்கும் நிலையில் இவரே பாடலையும் பாடி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி சிறந்த இயக்குனராக வளம் வந்தவர் மிஷ்கின், இவர் விஜய் சேதுபதியுடன் முதன்முதலாக கைகோர்த்து இருக்கும் திரைப்படம் தான் ட்ரெயின்.

இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கின்றார். இந்த திரைப்படத்தில் நாசர், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிரித்விராஜ், கே.எஸ்.ரவிகுமார், கணேஷ் வெங்கட்ராமன், கனிகா, சிங்கம் புலி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதையாக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்த திரைப்படத்தின் விஜய் சேதுபதி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது இயக்கத்துடன் சேர்த்து இசையமைப்பாளராகவும் அசத்தி வருகிறார் மிஸ்கின். ஏற்கனவே இவர் இயக்கிய டெவில் என்ற திரைப்படத்தில் பாடல்களை இசையமைத்து பாடியும் இருந்தார்.

இது ரசிகர்களை அந்த அளவுக்கு கவரவில்லை என்றுதான் கூற வேண்டும். இந்நிலையில் ட்ரெயின் திரைப்படத்திலும் இவர் தான் இசையமைப்பாளர் என்று கூறப்பட்டு வந்தது. இந்த திரைப்படத்தில் மட்டும் மொத்தம் நான்கு பாடல்கள் இருப்பதாகவும், அதில் ஒரு பாடலை மிஷ்கின் பாடி இருப்பதாக கூறப்படுகின்றது.
மற்றொரு பாடலை ஸ்ருதிஹாசன் பாடி கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஏற்கனவே டெவில் திரைப்படத்தில் நீங்க செஞ்ச சம்பவம் போதும் இந்த திரைப்படத்தை யாவது விட்டு விடுங்கள் என்று கெஞ்சி கேட்டு வருகிறார்கள்.
