கோட் பட தயாரிப்பாளர் புத்திசாலித்தனமாக யோசித்து படத்தை டிஸ்ட்ரிபியூட் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது கோட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கின்றார். ags நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கின்றார். மேலும் இப்படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றார்கள்.
இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. நடிகர் விஜய் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் விஜய் கட்சி வேலைகளிலும் பிஸியாக இறங்கி இருக்கின்றார். இவரின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது தொடர்பான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்குகளை வாங்கியது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் ராகுல்.
கிட்டத்தட்ட 80 கோடிக்கு மேல் செலவு செய்த படத்தை வாங்கி இருக்கிறாராம். அவர் வாங்கிய நிலையிலும் எந்த விநியோகித்தரும் அவரை அணுகி படத்தை வாங்குவதற்கு முன்வரவில்லை. எல்லாரும் மிக அமைதியாக இருக்கிறார்களாம். ஏனென்றால் ராகுல் டிஸ்ட்ரிபியூசனில் வெளியிட பிளானில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் அது உண்மை இல்லை என்றும் ராகுல் இந்த படத்தை யார் கேட்டாலும் கொடுக்க மாட்டார் என்று கூறப்படுகின்றது.
ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை விற்கும் போது ஒரு கண்டிஷன் ஒன்று போட்டிருக்கிறார்களாம். உங்களுக்கு தமிழ்நாடு திரையரங்குகளை தருகிறோம். நீங்கள் தான் தமிழ்நாடு முழுக்க ரிலீஸ் செய்ய வேண்டும். இதனை ரேட்டை அதிகமாக வைத்து ஏரியா வாரியாக விற்பனை செய்யக்கூடாது.
இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கைமாறும்போது அதிக தொகைக்கு டிக்கெட் விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். ஒருவேளை படம் நன்றாக ஓடவில்லை என்றால் ரீபண்ட் கொடுங்கள் என்று அனைவரும் தங்களிடம் வந்து நிற்பார்கள் என்பதற்காக புத்திசாலித்தனமாக யோசனை செய்து கோட் திரைப்படத்தை தமிழகம் முழுக்க ஒரு நிறுவனம் மட்டும்தான் வெளியிட வேண்டும் என்று ஸ்ட்ரிட்டாக கூறிவிட்டார்களாம் ஏஜிஎஸ் நிறுவனம்.