குடும்ப எச்சரிக்கையை மீறிய ஆசை…! பட்டப்பகலில் பயங்கரம்… நடுரோட்டில் துரத்தி துரத்தி வெட்டிக் கொலை… அதிர்ச்சி பின்னணி…!!

By Gayathri on ஆவணி 19, 2026

Spread the love

சென்னை புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்த ரத்தினவேலு என்ற கூலித்தொழிலாளிக்கு, பாடியநல்லூரில் வசிக்கும் தனது மைத்துனரின் மனைவியுடன் தகாத உறவு இருந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அறிந்த குடும்பத்தினர் அவரைப் பலமுறை கண்டித்தும் அவர் அந்த உறவை கைவிடாமல் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவியின் சகோதரர்கள் ரத்தினவேலு மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

இதன் விளைவாக, வழக்கம் போல் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ரத்தினவேலுவை நடுத்தெருவில் வழிமறித்த அவரது மைத்துனர்கள், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோபம் முற்றிய நிலையில், தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் அவரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த செங்குன்றம் காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள், ரத்தினவேலுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.