கடவுளே… மனிதநேயம் செத்து போச்சா?… மெட்ரோ லிஃப்ட்டில் மாற்றுத்திறனாளியை புறக்கணித்து… பயணிகள் உள்ளே புகுந்த அவலம்… டெல்லியில் அரங்கேறிய சம்பவம்… இணையத்தில் வெடித்த கண்டனங்கள்…!

By Swetha on ஐப்பசி 15, 2026

Spread the love

டெல்லி மெட்ரோவில் உள்ள லிஃப்ட் அருகில் வீல்சேரில் காத்திருந்த தேஜ் பெனிவால் என்ற உள்ளடக்க உருவாக்குநர் தனது அனுபவத்தை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். லிஃப்ட் கதவு திறந்ததும், வரிசையாக நிற்க வேண்டிய பயணிகள் அதை மதிக்காமல் முந்திச் சென்று உள்ளே நுழைந்தனர்.

அந்த லிஃப்ட்டில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், வீல்சேரில் இருந்தவரால் உள்ளே செல்ல முடியவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கும், அவசியமானவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய லிஃப்ட்டில், அடிப்படை நாகரிகமின்றி பொதுமக்கள் நடந்து கொண்டது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

   

https://www.instagram.com/reel/DeV_9kTPQ4s/?utm_source=ig_web_button_share_sheet

   

“உண்மையில் மாற்றுத்திறனாளி யார்?” என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் மக்களின் நன்னடத்தை மற்றும் மனிதநேயம் குறைந்து வருவதாக நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.