சோதனை தீரவில்லே… சொல்லி அழ யாருமில்லே… விரக்தியின் எல்லைக்கே சென்ற கர்நாடகா இளைஞர்கள் – பிரம்மசாரிகள் மடம் கட்டிக்கொடுங்க என கோரிக்கை!

By Elango on மார்கழி 11, 2025

Spread the love

கர்நாடகா மாநிலம் ரள்ளிகா என்ற கிராம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் பல ஆண்டுகளாக உள்ளனா். அதனால் தங்களுக்கு பிரம்மச்சாரி மடம் கட்டித் தர வேண்டும் என ரள்ளிகா கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தங்கள் மகன்களுக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை என்பதால் அந்த இளைஞர்களின் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விஷயத்தை தாசில்தார் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பஞ்சாயத்து நிர்வாகம் இளைஞர்களுக்கு உறுதி அளித்துள்ளது.