அம்மாடியோ… பர்தா போட்டா கண்டுபிடிக்க முடியாதா?… 70 லட்சம் தங்கம், iPhone 17-ஐ அமுக்கிய கில்லாடி லேடி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

Spread the love

ஹைதராபாத்தில் பூட்டப்பட்ட வீடுகளைக் குறிவைத்து, புர்கா அணிந்து தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை காவல்துறையினர் அண்மையில் கைது செய்துள்ளனர். நகரின் பல்வேறு பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த அப்பெண், இதுவரை சுமார் ரூ. 70 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் அதிநவீன ஐபோன் 17 ரக செல்போன் ஆகியவற்றைத் திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தன் அடையாளத்தை மறைப்பதற்காகவும், அப்பகுதியில் உள்ளவர்களின் கவனத்தைத் திருப்பாமல் இருப்பதற்காகவும் அவர் வழக்கமாக புர்கா அணிந்து திருட்டுச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார். திருடிய தங்க நகைகளை அடகு வைத்தும், விற்றும் வந்த அப்பெண், அந்தப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர் புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான நபரின் நடமாட்டத்தைக் கண்காணித்த காவல்துறையினர், இறுதியாக அப்பெண்ணைக் கைது செய்து அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஐபோன் 17-ஐப் பறிமுதல் செய்தனர். இந்தத் துணிச்சலான கொள்ளைச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வரும் போலீசார், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

அடகடவுளே..! அலட்சியமா? விபத்தா?… இயந்திரத்தில் பாய்ந்த கரண்ட்… 8 தொழிலாளர்கள் பலியான கோரம்… நடுங்க வைத்த மின் விபத்து…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்திற்குட்பட்ட சாபோலி பகுதியில், கிராமங்களை இணைக்கும் குறுகிய சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.…

20 seconds ago

கோயிலில் அதிர்ச்சி சம்பவம்… சிறுமிகளிடம் ஆபாச செயல்… வெளிநாட்டில் வீடியோ விற்பனை… பூசாரியின் இரட்டை முகம் அம்பலம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த ஷியாம் பீகாரி என்பவர், கோவிலுக்கு வரும்…

9 minutes ago

ரூ.634 கோடி வழக்கு: சிக்கிய கே.என்.நேரு…. அன்பில் மகேஸை தொடர்ந்து அடுத்த கைது…. திமுகவுக்கு அடுத்தடுத்த ஷாக்….!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ரூ.634…

22 minutes ago

BIG BREAKING: நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்….. தமிழ் திரையுலகை உலுக்கும் அடுத்த சோகம்….!

தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் பிரபல நகைச்சுவை, குணச்சித்திர நடிகரான ஜூனியர் பாலையா அவர்கள், தனது 70வது வயதில் உடல்நலக்குறைவு…

26 minutes ago

திடீர் திருப்பம்…. தவெக-வை வீழ்த்த கூட்டணி அமைக்கிறதா திமுக-அதிமுக?… சீமான் சொன்ன ஷாக்கிங் பதில்…. சீக்ரெட்டை உடைத்த தராசு ஷ்யாம்….!

தமிழக அரசியலில் தவெக ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், எதிர்வரும் இடைத்தேர்தல்களை மையமாக வைத்து அரசியல் களத்தில் பல்வேறு…

30 minutes ago

நள்ளிரவு 3 மணிக்கு கேட்ட அந்த அலறல் சத்தம்… விபூதி, குங்குமத்தோடு கேமரா முன் வந்த தாய்… செஞ்சி சிறுமி கடத்தலில் புதிய திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 23 நாட்களாகும் நிலையில்,…

35 minutes ago