அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்த கொடூர குற்றவாளிக்கு மூன்று ஆயுள் தண்டனையுடன், ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது. முன்னாள் காவலரும், தன்னார்வ தீயணைப்பு வீரருமான 31 வயதான கெட்ரேயன் கே. வில்லியம்ஸ் என்பவர், தான் பணியாற்றிய ‘நியூ ரோட்ஸ்’ தீயணைப்பு நிலையங்கள் மற்றும் தனது வீட்டில் வைத்து 8 முதல் 11 வயதுக்குட்பட்ட பல சிறுவர்களைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அந்தக் கொடூரச் செயல்களை வீடியோவாகப் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வெறும் 39 நிமிட விவாதத்திற்குப் பிறகு கெட்ரேயன் கே. வில்லியம்ஸ் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. லூசியானா சட்டப்படி குழந்தை பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்குக் கட்டாய ஆயுள் தண்டனை விதிக்கப்படும் நிலையில், இந்தக் கொடூரனுக்கு ஒருபோதும் மறக்க முடியாத தண்டனையை வழங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கெட்ரேயன் கே. வில்லியம்ஸுக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் விதித்ததுடன், அவரது ஆண்மையை இரசாயன முறையில் நீக்கவும் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் இத்தகைய கடுமையான தண்டனையைப் பெறும் இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசிய மாவட்ட வழக்கறிஞர், ஒருவர் ஒரு குழந்தையைப் பாலியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தினால் அவரது ஆண்மையைப் பறிப்போம் என்றும், இனி இவரால் எந்தக் குழந்தையையும் துன்புறுத்த முடியாது என்பதை அறிந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நிம்மதியடையும் என்றும் தெரிவித்துள்ளார். தான் பார்த்ததிலேயே இதுதான் மிக மோசமான குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு என நீதிபதியும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…