#image_title
எல்லோருக்கும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் எல்லோராலும் அதை செயல்படுத்த முடியாது. தொழிலில் சாதிக்க வேண்டும் முன்னுக்கு வரவேண்டும் என்றால் முறையான திட்டமிடல் அதற்கான லட்சியம் முயற்சி செய்ய வேண்டும் விழுந்தாலும் எழுந்திருக்க தைரியம் வேண்டும் என்று பல விஷயங்கள் இருக்கிறது. பெங்களூரில் சேர்ந்த தம்பதியினர் பொம்மை விற்பனையில் மிகப்பெரிய தொழிலை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களை பற்றி இனி காண்போம்.
பெங்களூரில் நல்ல ஒரு செட்டிலான வாழ்க்கையை வாழ்ந்து வந்த சுகாஷ் ராம கவுடா மற்றும் சுனிதா அதை விட்டுவிட்டு நீலகிரியில் குடியேறினர். அப்போது நீலகிரியில் இருக்கும் போது அங்கே இருக்கும் கிராமப்புற பெண்கள் நிலையான வருமானம் இல்லாமல் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதை அவர்கள் கவனித்தனர். விவசாயம் மற்றும் உழைப்பு ஆகியவைதான் அவர்களது வாழ்வாதாரமாக இருந்தது. ஆனால் அதுவும் அவர்களுக்கு நிலையான வருமானத்தை கொடுப்பதாக தெரியவில்லை.
அப்படி சமூக அக்கறையோடு தொடங்கப்பட்டது தான் The Good Doll . 2023 ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டது 2019 ஆம் ஆண்டு இந்திய நியாட் சந்தை அறக்கட்டளை மூலம் திட்டமிடல் செய்யப்பட்டது. சுனிதா கைவினைப் பொருட்கள் செய்வதில் விருப்பம் கொண்டிருந்ததால் அவர் முதலில் தொழில் முனைவோர் பயணத்தை கற்றுக் கொண்டார். அதாவது கார்மெண்ட்ஸ் இல் துணி தைக்கும் போது தேவையற்ற சிறிய துணி துண்டுகளை வைத்து பொம்மை தயாரிக்கும் முறையை அவர் கற்றுக் கொண்டார்.
முதலில் மறு பயன்படுத்தப்பட்ட துணிகளை கொண்டு நீலகிரி சமூகத்தில் இருந்த பெண்களுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் 5 பெண்களைக் கொண்டு இந்த பயிற்சி மையம் ஆரம்பித்தது பொம்மைகள் மட்டுமல்லாமல் கோஸ்டர்கள் குரோசெட் எம்ராய்டரி போன்ற பல பொருட்களை அவர்கள் தயாரிக்க தொடங்கினர். தற்போது வரை 95 பெண்களைக் கொண்டு 12000 கிலோவுக்கு மேல் உள்ள ஜவுளி கழிவுகளை மறுசுழற்சி செய்து பொம்மைகளை உருவாக்கி இருக்கின்றனர் சுஹாஷ் மற்றும் சுனிதா.
இவர்கள் தயாரித்த இந்த The Good Doll பொம்மைகள் 500 ரூபாய் முதல் 1250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவின் 60 சில்லரை கடைகளில் இது விற்பனை செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் பொம்மைகளை விட இவர்களின் பொம்மைகளின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் கைகளால் செய்யப்பட்டவை என்றதால் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள் என்று கூறுகிறார் சுனிதா. தற்போது இந்த மறுசுழற்சி செய்யும் பொம்மையை விற்று 75 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி இருக்கிறார்கள் இந்த தம்பதியினர். போக போக இதை இந்தியா முழுக்கவும் பிரபலம் அடைய செய்ய வேண்டும் பல பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு இருக்கின்றனர் சுஹாஷ் மற்றும் சுனிதா தம்பதியினர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…