கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பகுதியில் வசித்து வந்த தம்பதி, தங்களது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவிக்கு ரத்தப் புற்றுநோய் (Blood Cancer) பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அதன் தீவிரத்தாலும் தொடர் சிகிச்சையாலும் அந்தக் குடும்பம் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாழ்வின் மீதான பிடிப்பை இழந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகள் ஆகிய மூவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர், மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
